திங்கள், 8 டிசம்பர், 2014

அரசு ஊழியர் கந்து வட்டியால் மிரட்டல் பாதிக்கப்பட்டர்கள் கலெக்டரிடம் மனு

திருவாரூர்,: திருவாரூர் மாவட்டத்தில், கந்து வட்டி என்ற பெயரில் அச்சுறுத்தி வரும் அரசு ஊழிர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்ட ரிடம் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (அரசு ஊழியர்), அவர் மனைவி சாந்தி இருவரும் அப்பகுதியினர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, பல மடங்காக வசூலித்து வருவருதுடன், திருத்துறைப்பூண்டி தொடக்க வேளாண் மை கடன் சங்கத் தலைவர், உதவியாக இருப்பதால், பல்வேறு விஷமத்தனம், உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
உரம் கடத்தல், அரசு அதிகாரிகளை வைத்து துஷ்பிரயோகம் செய்தது தொட ர்பாக கடந்த 1998 முதல் 2001 ஆண் ஆண்டு வரை பணி நீக்கம் செய்யப்பட் டிருந்தார்.தற்போது பணியில் சேர்ந்த நிலையில் மீண்டும் கந்து வட்டித் தொ ழிலை வைத்துக் கொண்டு அவரிடம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தி வருகிறார். இவர் அச்சுறுத்ததால், அதேப்பகுதியைச் சேர்ந்த சரவணன் தற்கொலை செய்து கொண்டார். என பாரத மனித உரிமை பாதுகாப்பு கழக த்தினர் கலெக் டர் மதிவாணனிடம் நேரில் மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்டுள்ள ராமமூர்த்தி மனைவி சரோஜா என்பவர், தன்னிடம், அவர் நிலத்திற்கு அடமானத்திற்கு ஒரு லட்சம் வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மிரட்டுவதாகவும், விஜயேந்திரன் மனைவி ரேவதி, தான் வாங்கிய ரூ.25 ஆயிரத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரமும், ஐயப்பன் மனைவி ரேகா ரூ.15 ஆயிரத்திற்கு,ரூ.ஒரு லட்சத்து 55 ஆயிரமும், அருள் மனைவி சுமதி ரூ.20 ஆயிரத்திற்கு ரூ. ஒரு லட்சத்து 47 ஆயிரமும், சேகர் மனைவி ரூ.25 ஆயிரத்திற்கு, ரூ.ஒரு லட்சத்து 62 ஆயிரமும், ஆறுமுகம் மனைவி ரூ.25 ஆயிரத்திற்கு ரூ. ஒருலட்சத்து 10 ஆயிரமும் கேட்டு மிரட்டுவதாகவும், ராமலிங்கம் மனைவி தாரா ரூ.30 ஆயிரத்திற்கு, சொத்துக் களை எழுதி வாங்கிக் கொண்டு மேலும் மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் தக்க நீதி கேட்டும், உயிருக்கு பாது காப்பு வழங்க கோரியும் நேற்று தனித்தனியாக நேரில் புகார் கொடுத்தனர்.
tks
dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka