செவ்வாய், 16 டிசம்பர், 2014

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் உலகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை உடனடியாக வழங்க கோரி கோட் டூரில் இந்திய கம்யூ னிஸ்டு கட்சியினர் உண்ணா விரதம் இருந்தனர். இதில் உலகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் அமைக்க வேண்டும் என் பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ னிஸ்டு கட்சியினர் உண்ணா விரதம் இருந்தனர். உண்ணா விரத போராட்டத்திற்கு கோட்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் ரெங்கராஜ், மாவட் டக்குழு உறுப்பினர்கள் சி.உலகநாதன், லிட்டின்மேரி, ஒன்றிய நிர்வாக குழு உறுப் பினர்கள் வீராசன், சிவசண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். திருத்துறைப்பூண்டி உலகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அம்புஜம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் போராட் டத்தை தொடங்கி வைத்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஜோதிகருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணி, கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன், ராஜகோபால், கட்சியின் கிளை செயலாளர்கள் சேகர், மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோரிக்கைகள்

கோட்டூர், தோட்டம், புழுது குடி, கருப்புகிளார், கீழப் பனையூர் ஆகிய ஊராட்சி களுக்கு உட்பட்ட பொது மக்கள் பயன்பெறும் வகையில் கோட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், மடம், அரண்மனை, எஸ்டேட், கோவில் மனை களில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், கோட்டூர் கால் நடை மருந்தகத்தை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை கோட்டூர் மற்றும் புழுதுகுடி ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு உடனடி யாக வழங்க வேண்டும் என் பன போன்ற கோரிக்கைகள் உண்ணாவிரதத்தின்போது வலியுறுத்தப்பட்டன. இதில் கோட்டூர் தோட்டம், புழுது குடி, கீழபனையூர், கருப்பு கிளார், காடுவாகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திர ளாக கலந்து கொண்டனர்.

மாலையில் மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சிவ புண்ணியம், திருத்துறைப் பூண்டி ஒன்றிய செயலாளர் வையாபுரி, துணை செயலா ளர் செந்தில்நாதன் ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka