திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 3வது பேரவை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ரவிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மோகன்தாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் கார்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் குணசேகரன், ராஜகணபதி மற்றும் தமிழ்ச்செல்வி, விஜயா, சுமதி, சித்ரா ஆகியோர் பேசினர். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணியை முடிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கால்நடைகள் அடைவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக