திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் தொட்டி இருக்கும்
வளாகம் முழுவதும் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் 2001ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 15 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் நகர பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியிலிருந்து தலைஞாயிறு, வேளூர், நெடும்பலம் போன்ற பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் அதிகாரிகளுக்கு அலுவலக கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி உள்ள வளாகம் முழுவதும் செடி, கொடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய பகுதி எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று யாருக்கும் தெரியவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுற்று பகுதி மற்றும் வளாகம் முழுவதும் பல்வேறு செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு, தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tks
Dina.Karan

0 கருத்துகள்:
கருத்துரையிடுக