வெள்ளி, 27 ஜனவரி, 2012

70 மீட்டர் சாலை யாருக்கு சொந்தம்? ம.தி.மு.க., பேனரால் திடீர் பரபரப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பழைய பஸ் ஸ்டாண்ட் -மன்னை சாலையில், உள்ள 70 மீட்டர் சாலை நகராட்சிக்கு சொந்தமானதா? நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதா? என்ற கேள்வியுடன், ம.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் -மன்னை சாலையில் உள்ள 70 மீட்டர் சாலை நகராட்சி வசம் இருந்தது. பின்னர், கடந்த தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., நகராட்சித்தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, தெரிவித்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கேட்டபோது, அந்த குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து கொடுத்தால், நாங்கள் எங்கள் பணியில் எடுத்துக்கொள்வோம் என தெரிவித்தனர்.

நகராட்சி நிர்வாகமும் செப்பனிட்டு தருவதாக, கூறி, ஆட்சி மாறியும் தற்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி அ.தி.மு.க., வசம் வந்த பின்னரும், சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.இதனால், டூவீலர் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, தண்ணீர் தேங்கினால், நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
ம.தி.மு.க., நகர செயலாளர் கோவி சேகர், வைகோ படத்துடன் கேள்வி எழுப்பி, சாலை யாருக்கு சொந்தம்? என்று பேனர் வைக்கப்பட்டபின், "நெடுஞ்சாலைத்துறைக்கு ஆதரவாக உடனடியாக பேனரை அகற்ற வேண்டும்' என கூறி வருகின்றனர்.ஆனால், பழுதடைந்த சாலையை செப்பனிடுவது யார்? என்ற கேள்விக்கு நேற்று வரை பதில் இல் லை. இந்நிலையில், ம.தி.மு .க., சார்பில் வைத்துள்ள பேனர், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka