வெள்ளி, 27 ஜனவரி, 2012

சான்றிதழ்களுக்காக 60 கி.மீ. பயணிக்கும் 5 கிராம மக்கள்

திருத்துறைப்பூண்டி, ஜன. 26: அரசின் நிர்வாகக் குளறுபடியால் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக, 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீடாமங்கலம் செல்ல சுமார் 60 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, அருகே உள்ள திருவாரூர் வட்டத்துடன் அவற்றை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்டகுடி, 57 குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்கள் வடபாதிமங்கலம் வருவாய் சரகத்திலும், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டும், நீடாமங்கலம் வட்டத்திலும் அமைந்துள்ளன.

இந்தக் கிராம மக்களுக்கு அருகில் உள்ளது திருவாரூர். ஆனால், நீடாமங்கலம் வட்டத்துடன் இந்தக் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தக் கிராமங்களில் இருந்து திருநெல்லிக்காவல் வந்து ரயில் மூலமாகவோ அல்லது நாள் ஒன்றுக்கு சில முறை வரும் அரசுப் பேருந்து மூலமாகவோ திருவாரூர் செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று சான்றிதழ்கள், முதியோர், விதவை ஆதரவற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் நாள் முழுவதும் செலவிட்டு, பொருள் செலவும் செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர் மேற்குறிப்பிட்ட 5 கிராம மக்கள்.

குறிப்பிட்ட அதிகாரி அன்று இல்லையென்றால், மீண்டும் அடுத்த நாள் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

இந்த நிலையைப் போக்க குறிப்பிட்ட அந்த 5 கிராமங்களையும் திருவாரூர் வட்டத்துடன் இணைக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூத்தாநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, கூத்தாநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு மேற்கண்ட 5 கிராமங்களையும் அதில் இணைத்து, இந்த கிராம மக்களின் துயரைப் போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

70 மீட்டர் சாலை யாருக்கு சொந்தம்? ம.தி.மு.க., பேனரால் திடீர் பரபரப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பழைய பஸ் ஸ்டாண்ட் -மன்னை சாலையில், உள்ள 70 மீட்டர் சாலை நகராட்சிக்கு சொந்தமானதா? நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதா? என்ற கேள்வியுடன், ம.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் -மன்னை சாலையில் உள்ள 70 மீட்டர் சாலை நகராட்சி வசம் இருந்தது. பின்னர், கடந்த தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., நகராட்சித்தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, தெரிவித்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கேட்டபோது, அந்த குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து கொடுத்தால், நாங்கள் எங்கள் பணியில் எடுத்துக்கொள்வோம் என தெரிவித்தனர்.

நகராட்சி நிர்வாகமும் செப்பனிட்டு தருவதாக, கூறி, ஆட்சி மாறியும் தற்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி அ.தி.மு.க., வசம் வந்த பின்னரும், சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.இதனால், டூவீலர் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, தண்ணீர் தேங்கினால், நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
ம.தி.மு.க., நகர செயலாளர் கோவி சேகர், வைகோ படத்துடன் கேள்வி எழுப்பி, சாலை யாருக்கு சொந்தம்? என்று பேனர் வைக்கப்பட்டபின், "நெடுஞ்சாலைத்துறைக்கு ஆதரவாக உடனடியாக பேனரை அகற்ற வேண்டும்' என கூறி வருகின்றனர்.ஆனால், பழுதடைந்த சாலையை செப்பனிடுவது யார்? என்ற கேள்விக்கு நேற்று வரை பதில் இல் லை. இந்நிலையில், ம.தி.மு .க., சார்பில் வைத்துள்ள பேனர், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் குடியரசு தின விழா தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


திருத்துறைப்பூண்டி, ஜன. 26: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் குடியரசு தின விழா தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கே. உலகநாதன் எம்எல்ஏ, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வி. ஜெயக்கொடி, அரசுத் தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பி. மதுரம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் வேதநாயகி சிங்காரவேலு, நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ந. சங்கரன் தலைமையில், நகர்மன்றத் தலைவர் கே. உமாமகேஸ்வரி ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.

தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஆர். சுந்தர், நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிபதி அசீம், மின் வாரிய அலுவலகத்தில் உதவிச் செயற்பொறியாளர் அழகேசன், உதவிப் பொறியாளர் ஜான்விக்டர், காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் எம். ஆனந்தகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வாளர் செந்தில்முருகன், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அன்புராணி ஆகியோர் கொடியேற்றினர்.

அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் கிளை மேலாளர் ராஜா, ரயில் நிலையத்தில் மேலாளர் மோகன்ராஜ், லயன்ஸ் சங்கத்தில் அதன் தலைவர் ஆர். செல்வகணபதி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பொருளாளர் பி. அன்பரசன், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெ. அருள்மணி தலைமையில், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் டிஎஸ். அண்ணாதாசன், நெடும்பலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்லத்துரை, எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கு. மாந்தரையன், வடக்குவீதி நடுநிலைப் பள்ளியில் ஜேசீஸ் தலைவர் ரத்தினசாமி ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.

கிளை சிறைச் சாலையில் சிறை கண்காணிப்பாளர் வைரவன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். வட்டாட்சியர் வி. ஜெயக்கொடி கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி. ஜி. கோபி, காவல் நிலையத்தில் ஆய்வாளர் செங்குட்டுவன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே.பி. விஸ்வநாதன், பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் கோ. அருணாசலம், வனத் துறை அலுவலகத்தில் வனச் சரகர் மாணிக்கம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.கே.பி. நடராஜன், அரசு ஆண்கள்

மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி.என். சண்முகம், ரகமத் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியை சகுந்தலா தலைமையில், பேரூராட்சித் தலைவர் கோ. அருணாசலம், மருதங்காவெளி பெண்கள் நடுநிலைப்

பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் க. மாணிக்கம், வர்த்தகர் கழகத்தில் அதன் தலைவர் பாலசுப்பிரமணியம் கொடியேற்றினர்

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka