ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஆதிரெங்கம் ஊராட்சியில் விலையில்லா பொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.



விலையில்லா பொருட்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் ஊராட்சியில் விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். உலகநாதன் எம்.எல்.ஏ., ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல்முனாப், கூட்டுறவு சங்க தலைவர்கள் சிங்காரவேலு, மணியன், சண்முகசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் 815 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அதேபோல விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகியவை கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

1 லட்சம் பயனாளிகள்
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரத்து 27 பயனாளிகளுக்கு ரூ.83 கோடியே 84 லட்சத்து 77 ஆயிரத்து 291 மதிப்பில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் விஸ்வநாதன், திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் வேதநாயகிசிங்காரவேல், ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், ஆதிரெங்கம் கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, துணைத்தலைவர் ஷேக்காதி, ஊராட்சி துணை தலைவர் ராதாஅன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா, ஒன்றிய ஆணையர்கள் தமிழ்மணி, அருள்சேகரன், தாசில்தார் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka