ஞாயிறு, 31 மே, 2015

நெல் திருவிழா

 திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரெங்கம் இயற்கை வேளாண் மற்றும் பயிற்சி மையத்தில், நமது நெல்லை காப்போம் கிரியேட் சார்பில், தேசிய அளவிலான நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா நடைபெற்றது.
கிரியேட் சேர்மன் துரைசிங்கம் தலைமை வகித்தார். ஆதிரெங்கம் ஊராட்சி தலைவர் அப்துல்முனாப் முன்னிலை வகித்தார்.
நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் வரவேற்றார்.
நெல் திருவிழாவில், மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் சாந்தா ஷீலா நாயர், விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கி பேசியதாவது:
நமது பாரம்பரிய நெல்லை பாதுகாத்து வருவது தான், இரண்டாவது பசுமை புரட்சி. நாற்பது ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல்லில் சப்கலெக்டராக் இருந்த போது, பூச்சி மருந்து, ரசாயன உரம், உயர் ரக விதைகள் கொடுப்பது வேலையாக இருந்தது. இப்போது, இரண்டாவது பசுமை புரட்சியில், பூச்சி மருந்து வேண்டாம், என்றும் பாரம்பரிய நெல் ரகங்களை திருப்பி கொண்டு வாருங்கள், என்றும் சொல்கிறோம்.
கடந்த, 2006ல், பத்து ரகங்கள் வைத்து துவங்கி, 80 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை விரிவுபடுத்தி இருக்கிறீர்கள். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பது போல், சிறு தானியங்களையும் பாதுகாக்க வேண்டும்.
தர்மபுரியில் சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகள், குழு அமைத்து, கலெக்டர் மூலம், திட்டக் கமிஷனை அணுகினால், திட்ட கமிஷன் ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டர் மதிவாணன், திருவனந்தபுரம் தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி, மாநில ஒருங்கிணைப்பாளர் கேரளா ஸ்ரீதர், தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் அம்பலவாணன், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை கூடுதல் துணை இயக்குனர் சங்கரலிங்கம் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன், ஜிடி பவுன்டேசன் டாக்டர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிரியேட் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka