திங்கள், 11 மே, 2015

32 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நினைவுகள்...

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Image result for get together
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியிலுள்ள ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1982-1983 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள், மாணவிகள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதுடன், பலர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

முன்னதாக, பழைய மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தவிர குடும்ப உறவுகள், பணியாற்றும் விவரம், கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்து ஒருவருக்கொருவர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் தமிழரசன், தட்சிணாமூர்த்தி, ரெங்கநாதன் ஆகியோர் பழைய மாணவர்களுடன் இணைந்து நலம் விசாரித்து வாழ்க்கை முன்னேற்றத்துக்கு ஆலோசனை தெரிவித்தனர்.

அப்போது, மாணவர்களும் பள்ளிக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆசிரியர்களிடம் கூறி நினைவுகளை பரிமாறிக்கொண்டு பள்ளி முன்பாக அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு, பழைய மாணவர்களின் சார்பாக இனி ஆண்டுதோறும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதெனவும், ஆண்டுதோறும் இந்த சந்திப்பை கூடுதல் மாணவர்களுடன் நடத்துவதெனவும் முடிவெடுத்துக்கொண்டனர்.

ராமசுப்ரமணியன், வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தனர். முன்னாள் மாணவர் பக்கிரிசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka