Pages

சனி, 14 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டி அருகே தாய் கொலை: மகன் கைது




திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூர் வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் அருளம்மாள் (70). இவரது மகன்களான அந்தோனிசாமி, லூர்துசாமி (48) இருவருக்கும் இடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம். சண்டையை விலக்கச் சென்ற அருளம்மாளின் முகத்தில் லூர்துசாமி தாக்கினாராம்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, லூர்துசாமியை வியாழக்கிழமை கைது செய்தனர். அருளம்மாளின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக