Pages

சனி, 14 மார்ச், 2015

சாலை விபத்தில் இளைஞர் மரணம்


திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், அருந்தவபுலம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மு. செந்தில்குமார் (24). இவர் தனது நண்பர் மா. தினேஷுடன் (21) புதன்கிழமை இரவு திருத்துறைப்பூண்டியிலிருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பாமணிஅத்திமடை கடைவீதி வழியாகச் சென்றபோது, நடந்து சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தது. இதில் செந்தில்குமார், தினேஷ், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் செந்தில்குமார், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக