திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண்
மருத்துவமனை சார் பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர்
வக்கீல் ராஜா ராம் தலைமை வகித்தார். கண் சிகிச்சை முகாம் சேர் மன் தணிக்காசலம்
முன் னிலை வகித்தார். பொருளா ளர் பெருமாள் வரவேற்றார். கண் தொடர்பான அனைத்து
நோய்களுக்கும் டாக்டர் மோனிகா ஆலோ சனை வழங்கினார். முகாமில் 148 பேர் பங்கேற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 60 பேர் தேர்வு செய்யப்பட்டுகோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். முன்னாள்
துணை ஆளுநர் இளங்கோவன், முன்னாள்
தலைவர்கள் ஜான், திலகமணி, ராஜேந்திரன், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் குமணன் கலந்து கொண்டனர்.
செயலாளர் பாலு நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக