Pages

சனி, 10 ஜனவரி, 2015

தலைமைக் காவலரைபணி செய்ய விடாமல் தடுத்த தலைமைக் காவலர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே தலைமைக் காவலரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட
தலைமைக் காவலரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூóண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் ராஜா. இவர் மகளிர் காவலர் ஒருவருடன் கள்ளச் சாராய விற்பனையை தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த நன்னிலம் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முருகேசன், தலைமைக் காவலர் ராஜா மற்றும் காவல் உயரதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் முருகேசனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக