திருத்துறைப்பூண்டிஅருகே உள்ள மாங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவா(வயது38). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு மெயின் ரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வசந்தி அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். மேலும் திருணமணம் செய்த சர்மிளாபானு என்ற பெண்ணையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.ஞாயிறு, 12 ஏப்ரல், 2015
மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம் செய்த அரசு பஸ் கண்டக்டர் கைது
திருத்துறைப்பூண்டிஅருகே உள்ள மாங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவா(வயது38). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு மெயின் ரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வசந்தி அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். மேலும் திருணமணம் செய்த சர்மிளாபானு என்ற பெண்ணையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக